தங்கலான் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. !

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கலான் படம் திரையிடப்படுகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ’தங்கலான்’. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர்.
Proud to announce the World Premiere of “Thangalaan” Director’s Cut—the uncensored vision of the film—today at IFFR 2025! Catch it at Pathé 5 as part of the 54th International Film Festival Rotterdam at 11:00 AM CET. Honored to present this raw and uncompromised storytelling to… pic.twitter.com/pTUVOijVYq
— pa.ranjith (@beemji) February 1, 2025
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் தங்கலான் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதில் தங்கலான் திரைப்படத்தின் டைரக்டர்ஸ் கட் வெர்ஷனை திரையிடவுள்ளனர். இதனை மிகவும் பெருமையுடன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.