'கண்ணாடி வளையலில் தன்னே நன்னானே'..தங்கலான் அறுவடை பாடல் வெளியானது!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் இருந்து அறுவடை பாடல் வெளியாகி உள்ளது.இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, ஹரி கிருஷ்ணன், இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.ஸ்டுடியோ கிரீன் (Studio Green) ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Let the happiness of our #Thangalaan harvest song make its way to your hearts 🤎
— Studio Green (@StudioGreen2) August 12, 2024
Listen to #Aruvadai 🌿
▶️ https://t.co/deyx3aRh5y
A @gvprakash Musical 🎼#ThangalaanFromAug15@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets @MalavikaM_… pic.twitter.com/lHmKPCb3YT
இப்படம் கடந்த 1900ஆம் ஆண்டுகளில் கோலார் தங்க வயல் (KGF - Kolar Gold Field) பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாகவும் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆக 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்திலிருந்து அறுவடை பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை உமா தேவா எழுதி உள்ளார். இப்பாடலை நடிகர் விக்ரம், சிந்தூரி விஷால், மதிச்சியம் பாலா, சுகநிதி ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

