தொடர்ந்து சாதனை படைக்கும் தங்கலான் டீசர்

தொடர்ந்து சாதனை படைக்கும் தங்கலான் டீசர்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் லுக் போஸ்டர், டைட்டில் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்தது. அதற்கு காரணம் படத்தில் சியான் விக்ரமின் தோற்றம். இதுவரை நாம் பார்த்திராத வகையில் அடையாளம் தெரியாத விதமாக செம லுக்கில் உள்ளார் விக்ரம். அதிரடி சண்டை காட்சிகள், ரத்தம் தெரிக்கும் போர் காட்சிகள் என மிரட்டும் விதமாக படத்தின் டீசர் அமைந்தது. 

தொடர்ந்து சாதனை படைக்கும் தங்கலான் டீசர்

அண்மையில் வெளியான தங்கலான் திரைப்படத்தின் முன்னோட்டம் 90 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 

Share this story