ஹாப்பி நியூஸ்: ‘தங்கலான்’ டீசர் தயார்- பா.ரஞ்சித் கொடுத்த அப்டேட்.

photo

பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தங்கலான்’. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் டீசர் எப்போது என்ற அப்டேட்டை கொடுத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

photo

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்ற அப்டேட்டை இயக்குநர் கொடுத்துள்ளார். அடுத்த வாரம் ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் விடுமுறையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகும் என தெரிகிறது. இந்த ஹாப்பி நியூஸ் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

Share this story