ஒருவழியாக தங்கலான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

1

சீயான் விக்ரமின் புதுவித நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘தங்கலான்’ . பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுமட்டுமின்றி இந்த படத்திற்கு மெல்லிசை நாயகன் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்போதோ ரிலீஸ் வேண்டிய நிலையில் சில பல இடையூறுகளால இன்று வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் படத்தின் ட்ரைலருக்காக காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் ட்ரெய்லர் இன்று  ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this story