“தங்கலான் கண்டிப்பாக ஆஸ்கர் செல்லும்”- படக்குழு நம்பிக்கை

Thangalan

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படம் வருகிற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

dhananjeyan

இப்படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.சென்னையில், கடந்த 5ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தின் புரோமோசனுக்காக படக்குழு வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு புரோமோசனுக்காக செல்லும்போது அங்கு உள்ள ரசிகர்களை சந்தித்து படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.இதைதொடர்ந்து, சமீபத்தில் இந்த படத்தின் புரோமோசன் கோவையில் நடைபெற்றது.

Thangalan

அங்கு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது தங்கலான் படம் ஆஸ்கருக்குச் செல்லுமா? என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் பதிலளித்தார். அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், “அதற்கான முயற்சியில்தான் இருக்கிறோம். இந்த வருடம் தேசியத் திரைப்படக் கூட்டமைப்பில் விண்ணப்பித்துள்ளோம். அவர்களும் ட்ரைலரை பார்த்துவிட்டு ஆஸ்கருக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். அக்டோபர் அல்லது நவம்பரில் ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள். அதில் கண்டிப்பாக  தங்கலான் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்” என்றார்.

Share this story