‘தனி ஒருவன் 2’ தாமதம் ஏன் ? - நடிகர் ஜெயம் ரவி விளக்கம் !

jayam ravi

‘தனி ஒருவன் 2’ படத்தின் தாமதம் ஏன் என்ற விளக்கத்தை நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ளார். 

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘தனி ஒருவன்’. மெடிக்கல் மாஃபியா குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 

jayam ravi

இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் இதில் வில்லனாக நடித்திருந்த அரவிந்தசாமி தான். தனது கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார். ஹீரோவுக்கு நிகரான அழகு மற்றும் அறிவு கொண்ட வில்லனாக நடித்திருந்தார். அதனால் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் வெற்றிக்கு ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் ‘தனி ஒருவன் 2’ படத்தின் தாமதத்திற்கு காரணம் என்ன என்பதை நடிகர் ஜெயம் ரவி விளக்கியுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டே ‘தனி ஒருவன்’ படம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகளாக ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பணியாற்றி வந்ததால் இந்த படம் தாமதமானது. அதனால் விரைவில் ‘தனி ஒருவன் 2’ பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

Share this story