அமரன் படத்தை தலைசிறந்த படைப்பாக மாற்றியதற்கு நன்றி... படக்குழு நெகிழ்ச்சி...

amaran

அமரன் திரைப்படம் 100வது நாளை கடந்த நிலையில், அனைவருக்கும் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ் நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இத்திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் இதுவரை 335 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

sk

இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100  நாட்களை தாண்டிய நிலையில், சிப்பாய் விக்ரம்
இல்லாமல் இப்படம் முழுமையடையாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து அமரன் திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் எமோஷனலான ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.


மேலும், ராஜ்கமல் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவிடப்பட்டுள்ளது. அதில்,  நீங்கள் இல்லாமல், இந்த கலை ஒரு கனவு,  உங்கள் அன்பு,  இந்த கதையை உயிர்ப்பிக்கிறது. மேலும், இப்படத்தை  ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றியதற்கு பார்வையாளர்களுக்கும் அமரன் குழுவினருக்கும் நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

Share this story