டப்பிங்கை தொடங்கிய தங்கர் பச்சன்... ‘கலைமேகங்கள் கலைகின்றன’ புதிய அப்டேட்

Karumegangal Kalaiginrana

தங்கர் பச்சனின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியாக பாரதிராஜா நடித்துள்ளார். அவரது மகனாக கௌதம் மேனனும், மகளாக அதிதி மேனனும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறது.

Karumegangal Kalaiginrana

வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் பகுதியில் அதிகப்படியான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

Karumegangal Kalaiginrana

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை பணிகளை இன்று இயக்குனர் தங்கர் பச்சன் தொடங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

Share this story