“உச்ச நட்சத்திரங்களே களத்தில் இறங்கி உதவுங்கள்…..அதுவே நீங்கள் செய்யும் நன்றி கடன்”- தங்கர் பச்சன் பதிவு!

மிக்ஜாம் புயல் தனது கோர முகத்தை காட்டிய நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்து உங்களை உயர்த்திய மக்களுக்கு நன்றி கடன் செலுத்துங்கள் என நடிகரும் இயக்குநருமான தங்கர் பச்சன் பதிவிட்டுள்ளார்.
சொல்ல மறந்த கதை, அழகி,கருமேகங்கள் கலைகின்றன உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தங்கர் பச்சன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.
மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல்…
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) December 5, 2023
இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.