ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி... அறுவை சிகிச்சைக்குப் பின் முன்னாள் மனைவி சாய்ரா பானு அறிக்கை

saira banu

தான் உடல்நலம் குன்றியிருந்தபோது உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என அவரது மனைவி சாய்ரா பானு கூறியுள்ளார்.


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோர், தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்தாண்டு அறிவித்தனர். இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு அண்மையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 


இந்நிலையில், சாய்ரா பானு தரப்பில் அவரின் உடல்நலன் குறித்து வழக்கறிஞர் வந்தனா ஷா அண்ட் அசோசியேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ரா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சவாலான நேரத்தில் விரைந்து குணம் பெறுவதில் அவரது முழு கவனமும் உள்ளது. தன் மீது அன்பையும், அக்கறையையும், ஆதரவையும் கொடுத்தவர்களுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். தான் நலம்பெற வாழ்த்திய ரசூல் பூக்குட்டி, அவரது மனைவி ஷாதியா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

Share this story