தம்பி ராமய்யா மற்றும் அவர் மகன் உமாபதி மீது 'தண்ணி வண்டி' படத்தின் தயாரிப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

thambi-ramaiah-3

சினிமா தயாரிப்பாளர் சரவணன் நடிகர் தம்பி ராமய்யா மற்றும் அவர் மகன் நடிகர் உமாபதி மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக வலம் வரும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிப்பில் தண்ணி வண்டி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மாணிக்க வித்யா யக்கியுள்ளார். இப்படத்தில் ‘வில் அம்பு’ புகழ் சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மோசஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்ப்பில் ஜி சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  

இந்நிலையில் தம்பி ராமய்யா மற்றும் அவர் மகன் நடிகர் உமாபதி இருவரும் வேண்டுமென்றே படத்தை நஷ்டமடையச் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சரவணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

"இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு படம் தயாரிக்க உத்தேசித்து இருந்தபோது மேற்படி ராமையா என்பவர் தன்னை அணுகி தன்னுடைய மகனான உமாபதி ராமையா என்பவரை நடிகராக நடிக்க வைத்தால் அனைத்து பொறுப்புகளையும் தானே  ஏற்று அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து தன் மகனை வைத்து ஒத்துழைப்பு கொடுத்து சிறந்த முறையில் படத்தை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

Thanni vandi

அதன்படி திரைப்பட நடிகர் உமாபதி ராமையா என்பவரை வைத்து புதிய திரைப்படம் 'தண்ணி வண்டி' என்ற திரைப்படத்தை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் செய்தேன் அதன்படி 2020ஆம் வருடம் ஜனவரி மாதம் படத்தை நல்லபடியாக முடித்து விட்டு ரிலிஸ் செய்வதற்கு மேற்படி ஹீரோவாக நடித்த உமாபதி ராமையா என்பவரை பலமுறை திரைப்படம் வெளியிட அழைத்தும் அவர் வரவில்லை வேண்டுமென்றே தன்னை நஷ்டப்படுத்த வேண்டும் என்று நோக்கத்துடன் இவரும் இவருடைய தகப்பனார் இணைந்து கூட்டு சதி செய்து திட்டமிட்டு எனது படத்தை தோல்வியாக வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.

thanni vandi

 இந்த படத்திற்கு சுமார் 2.1/2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை OTT அல்லது வேறு திரைகளில் விற்றுக் கொடுப்பதாக அவர்கள் தெரிவித்தார் 

இந்த படத்தை நான் ஏன் வெளியிடக்கூடாதா ?  நடிகர் வந்து இந்த படத்தை பார்க்க ஏன் வரமாட்டார்கள் என்றும் தெரிவித்தார் 

மேலும் தன்னை ராமையா மற்றும் உமாபதி ராமையா என்பவர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்

Share this story