கருப்பணசாமி கோயி​லில் பூஜை​யுடன் தொடங்​கிய தனுஷ் படம் -எப்போது ரிலீஸ் தெரியுமா ?

dhanush


 ‘லப்​பர் பந்​து’ இயக்​குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்​கும் படத்​தில் தனுஷ் நடிக்​கிறார். மதுரை பின்னணியில் உரு​வாகும் இதன் படப்​பிடிப்பு சிவகங்கை அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயி​லில் பூஜை​யுடன் தொடங்​கியது.இதில் எஸ்​.ஜே.சூர்​யா, வடிவேலு, உறியடி விஜயகு​மார், ஹீரோயினாக பிரீத்தி முகுந்​தன் ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்​கர் இசை அமைக்​கிறார்.

சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்​ஸ், கரா ஸ்டூடியோஸ் மற்​றும் பிரி​மார்க் புரொடக் ஷன்ஸ் ஆகிய நிறு​வனங்​கள் இணைந்து இப்​படத்​தைத் தயாரிக்​கின்​றன. ​படத்தை அடுத்து ஆண்டு கோடை​யில் வெளி​யிட படக்​குழு திட்​ட​மிட்​டுள்​ளது.இதற்​கிடையே, இப்​படத்​தின் பூஜையை முன்​னிட்டு மார​நாடு கருப்​பண​சாமி கோயிலுக்கு 18 அடி உயர அரி​வாளைக் காணிக்கை​யாக வழங்​கி​யுள்​ளார் தனுஷ்.

Share this story