தனுஷின் 55வது படம் ஓம் -உடன் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா ?

dhanush

திரைக்கு வந்த ‘ரங்கூன்’, ‘அமரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் ‘ஓம்’ என்ற பான் இந்தியா படம், தனுஷ் நடிக்கும் 55வது படமாகும். இதை அவரது வுண்டர்ஃபார் பிலிம்ஸ், ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. சாய் பல்லவி, லீலா ஆகியோருடன் முக்கிய வேடங்களில் மம்மூட்டி, நஸ்ருதீன் ஷா நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசை அமைக்கிறார். வரும் அக்டோபர் 16ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட கதை என்று, ராஜ்குமார் பெரியசாமி சொன்னார். இதையடுத்து முதல் பாடலான ‘அலாகா லோவா’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Share this story