தனுஷ் நடிக்கும் "தேரே இஷ்க் மே’ ஹிந்தி படம் -எப்போது ரிலீஸ் தெரியுமா ?

dhanush

நடிகர் தனுஷ் தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவர் அவ்வப்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் .இவர் சமீபத்தில் நடித்த இட்லி கடை படம் வெற்றி பெற்றது .இவர் நடிக்கும் ஹிந்தி பட அப்டேட் பற்றி நாம் காணலாம் 
தனுஷ், கிரித்தி சனோன் நடிப்பில் உருவான 'தேரே இஷ்க் மே' படத்தின் 'ஓ காதலே' பாடல் வெளியானது.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.
ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

Share this story