நடிகர் ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் - தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

dhanush
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் 'குபேரா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'இட்லி கடை' படம்  வெளியாக உள்ளது . இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது 
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் ஜொலிக்கும் தனுஷின் சொத்து மதிப்பு, பிரம்மாண்ட வீடு மற்றும் சொகுசு கார்களின் அணிவகுப்பு குறித்த தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் பல விமர்சனங்களையும், அவமானங்களையும் சந்தித்த போதிலும், தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தனுஷ். 
தனுஷின் சொத்துக்களில் மிகவும் முக்கியமானது, சென்னை போயஸ் கார்டனில் அவர் தனது பெற்றோருக்காகக் கட்டிய பிரம்மாண்டமான நான்கு மாடி இல்லமாகும். சுமார் 19,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆழ்வார்பேட்டையில் அவருக்குச் சொந்தமாக ரூ. 18 கோடி முதல் ரூ. 25 கோடி வரை மதிப்புள்ள மற்றொரு வீடும் உள்ளது.மேலும் கார் பிரியரான அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் உள்ளது : இதன் மதிப்பு சுமார் ரூ. 7 கோடியாகும்.

Share this story