"குபேரா" படம் மூலம் குபேரனாக மாறிய தனுஷ் --எத்தனை கோடி சம்பளம் வாங்கினார் தெரியுமா ?

dhanush
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘குபேரா’ என்ற பான் இந்தியா படம், வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது. தேவிஸ்ரீ  பிரசாத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது  தனுஷ் உருக்கமாக பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.அதில் பேசிய தனுஷ் ,"குபேரா’ எனக்கு நடிப்பில் 51வது படம். தெலுங்கில் 2வது படம். ‘சார்’ படத்துக்கு முன்பே சேகர் கம்முலா இந்த கதையை என்னிடம் சொன்னார். ஆனால், அதை எழுதி முடிப்பதற்கு அதிக நாட்களானது. அவர் மிகவும் பிடிவாதக்காரர். மிகச்சரியான காரணங்களுக்காக பிடிவாதக்காரராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன்"
இப்போது இந்த படத்திற்காக தனுஷ்தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார் .இவருக்கு அடுத்து நாகார்ஜுன் அதிக சம்பளமும் பின்னர் ஹீரோயினாக நடித்த ராஷ்மிக்கா அதிக சம்பளமும் வாங்கியதாக கூறப்படுகிறது 
இப்படத்திற்காக நடிகர் தனுஷ் உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார். தன்னுடைய கெரியரில் தன்னைப் பார்த்து உடல் எடையை குறைக்க சொன்ன ஒரே இயக்குனர் சேகர் கம்முலா தான் என தனுஷ் பேசி இருந்தார். குபேரா படத்திற்காக நடிகர் தனுஷுக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.நாகர்ஜூனாவுக்கு குபேரா படத்தில் வில்லனாக நடிக்க ரூ.20 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவுக்கு ரூ.5 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். சிக்கந்தர் படத்திற்கு முன்னதாகவே குபேராவில் நடிக்க கமிட்டாகிவிட்டார் ராஷ்மிகா. குபேரா இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா பேசும்போது, தனுஷ் உடன் முழு நீள ரொமாண்டிக் படத்தில் நடிக்க தான் ஆசைப்படுவதாக கூறினார்.
 

Share this story