தனுஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது-என்ன காரணம் தெரியுமா ?
1779849049000
தமிழில் திரைக்கு வந்துள்ள ‘பா.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ ஆகிய படங்களை எழுதி இயக்கி யுள்ள தனுஷ், அடுத்து தனது புதிய படத்தை இயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட அப்படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பதாக சொல்லப்பட்டது. கடந்த 1960களில் இருந்து 1970கள் வரை நடக்கும் கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஏற்கனவே இதற்கான போட்டோஷூட் நடந்தது. இதற்காக தனுஷ், மிருணாள் தாகூர் இருவரும் நேரில் சந்தித்து, படத்தின் கதை குறித்து விவாதித்தனர்.
இதையடுத்து, அவர்கள் ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. காரணம், தனுஷ் நடிக்கும் சில படங்களின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடப்பதால், தற்போது அவரால் ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கைவசம் இருக்கும் படங்களின் படப்பிடிப்பை முடித்த பின்பு, நேரம் கிடைத்தால் புதிய படத்தை இயக்குவது என்று தனுஷ் முடிவு செய்துள்ளார். எனவே, அடுத்த ஆண்டு அவரது இயக்கத் தில் படம் உருவாகும் என்று தெரிகிறது.