"குபேராவில் குப்பை கிடங்கில் நடித்தோம்" -ராஷ்மிகா பற்றி தனுஷ் பேட்டி

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் ஆகியோர் நடித்துள்ள படம் 'குபேரா'. இப்படம் வருகிற ஜூன் 20ந் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது .இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்து கொண்ட தனுஷ் ஹிந்தியில் பேசாமல் தமிழில் பேசினார் .அதற்கு அவர் தனக்கு ஹிந்தி தெரியாதென்றும் அதனால் தமிழில் பேசுகிறேன் என்று கூறினார் .அவர் மேலும் இப்படத்தில் அவருடன் நடித்த நடிகை ரஷ்மிகாவை புகழ்ந்து பேசினார் .
இது பற்றி பேசிய தனுஷ், நானும் ராஷ்மிகாவும் ஒரு குப்பை கிடங்கில் சுமார் 6-7 மணி நேரம் சூட்டிங்கில் நடித்தோம். ராஷ்மிகா நலமாக இருந்தார். அவர் "சார், எனக்கு வாசனை வரவில்லை "என்று கூறியதாக அவரை பற்றி தனுஷ் புகழ்ந்து பேசியது குறிப்பிட தக்கது .இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாகார்ஜுன் "கடந்த இரண்டு ஆண்டுகளில், ரஷ்மிகா மந்தனா மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். ரன்பீர் கபூரின் 'அனிமல்', அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' மற்றும் விக்கி கௌஷலின் 'சாவா' ஆகிய படங்கள் 2000 கோடி வசூல் செய்தது என்று புகழ்ந்தார் .