"ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது" -தன் எதிரிகளுக்கு சவால் விட்ட தனுஷ்

பிரபல நடிகர் தனுஷ் தனது குபேரா திரைப்பட விழாவில் தன் எதிரிகளுக்கு சவால் விட்டு ஆவேசமாக பேசியுள்ளார் .
நடிகர் தனுஷ் 2002ம் ஆண்டில் துள்ளுவதோ இளமை படத்தின்மூலம் அறிமுகமானார் .அதன் பின் பல வெற்றிப்படங்களில் நடித்து வந்துள்ளார் .பின்னர் அவரை சுற்றி பல கிசுகிசுக்கள் எப்போதும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறது .இந்நிலையில் குபேரா திரைப்பட விழாவில் தன் எதிரிகளுக்கு மறைமுகமாக சவால் விட்டு பேசியுள்ளார்
குபேரா விழாவில் தனுஷ் பேசும்போது ,"நாலு வதந்திகளை கூறி என்னை காலி பண்ணலாம்னு நினைச்சா, ஒரு செங்கல்லை கூட ஆட்டமுடியாது. இத்தனை நெகட்டிவிட்டிகளுக்குப் பிறகும் எனக்காக இத்தனை ரசிகர்கள் கூட்டம் இருக்குன்னா, உங்க அன்பும் மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்னை கை பிடித்துக் கொண்டு வழி நடத்துதே அந்த சக்தியும் என்னை எப்பவுமே கை விடமாட்டாங்க, தம்பிங்களா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க .
என்னுடைய ரசிகர்கள், என்கூட இருக்க வரைக்கும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாம இருந்திருக்கேன், இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கேன். ஆனால், எப்போதுமே மன நிம்மதியுடன் இருக்க வேண்டும்.
என தனது எதிரிகளுக்கு தரமான பதிலடியை தனது பேச்சின் மூலம் கொடுத்துள்ளார் தனுஷ்.