"இனி என் அம்மா சொல்படி நடப்பேன்" -நடிகர் தனுஷ் பேச்சு .

dhanush
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ''குபேரா'' படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது 
அந்த நிகழ்வில் இப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், '' தனுஷ் இப்படத்திற்காக தேசிய விருது பெற வாழ்த்தி இருக்கிறார .தனுஷ் சார், பிச்சைக்காரர் வேடத்தை ஏற்றுக்கொண்டதே முதல் வெற்றிதான். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று வாழ்த்து தெரிவித்தேன் .அதே போல் கிடைத்தது "என்றார்  
இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனுஷ் பேசியதாவது:இப்போது தியேட்டர்களில் படங்கள் ஓடுவதே கேள்விக்குறியாகி வருகிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்‌ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது.
ஆனால், மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ படம் ஏற்படுத்தியுள்ளது. ‘வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேச வேண்டும்’ என்று என் அம்மா விஜயலட்சுமி சொன்னார். எனவே, இனி நான் அதிகமாக பேச மாட்டேன்.

Share this story