‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் என்ன பேசினார் தெரியுமா ?

dhanush

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தனுஷ் பேசியதாவது:

நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்படி மழை பாதிப்பு ஏற்பட்டால், எனது ரசிகர்கள் தன்னார்வலர்களாக முன்வந்து மக்களுக்கு உதவ வேண்டும். உங்கள் குடும்பத்திற்குச் செலவழித்தது போக, மீதமிருப்பதை நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்துங்கள். சமீபகாலமாக என்னை பின்னணியில் இருந்து இவர்தான் இயக்குகிறார், அவர்கள்தான் இயக்குகிறார்கள் என நிறைய போலி கதைகள் பரப்பப்படுகின்றன. என் பக்கம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான், என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை, தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதற்காகப் பேசாமல் இருக்க முடியாது.

புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வுகள் ஏற்படுவது இயல்புதான். இளைஞர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் 2 இடங்களிலும் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும். இவ்வாறு தனுஷ் பேசினார். மம்மூட்டி, சாய் பல்லவி, லீலா, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சாய் அபயங்கர் கலந்துகொண்டனர்

Share this story