"பிச்சைக்காரனாக நடித்ததற்கு விருது கொடுக்க வேண்டும்" -தனுஷை பாராட்டிய பிரபலங்கள்

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் குபேரா. இப்படத்தை சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கினர். இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த ஜூன் 20ந் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. குபேரா திரைப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் பிச்சைக்காரனாக நடித்திருந்தார் தனுஷ். இப்படத்தின் ரன் டைம் 3 மணிநேரத்திற்கும் மேல் இருந்ததால் தமிழ்நாட்டில் குபேரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் குபேரா படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது .அந்த விழாவில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் .அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி தனுஷ் பிச்சைக்காரன் பாத்திரத்தில் நடித்தது குறித்து புகழ்ந்து பேசினார் .மேலும் அவர் பேசுகையில் தன்னால் கூட அவவளவு இயல்பாக இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்றும் ,மேலும் தான் இந்த பிச்சைக்காரன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்க மாட்டேன் என்றும் ,தனுசுக்கு விருதுகள் கொடுக்க வேண்டும் என்று கூறினார் .மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனுசுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றும் ,மிக தத்ரூபமாக அவரின் நடிப்பு இருந்தது என்றும் தனுஷை பாராட்டி பேசினார்