பிரஜினின் 25ஆவது திரைப்படம் ‘தரைப்படை’ டீசர் வெளியீடு.

photo

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரஜின். குறிப்பாக இவரது நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காதலிக்க நேரமில்லை தொடரின் டைட்டில் சாங். இன்றும் பலரது பேவரைட். தொடர்ந்து நடிகை பாவ்னியுடன் இணைந்து இவர் நடித்த சின்னதம்பி தொடர் இவரை மேலும் பிரபலமாக்கியது. இவர் சின்னதிரை சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளிதிரையிலும் பல  படங்கள் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது அவரது 25ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார்.

photo

இயக்குநர் ராம் பிரபா இயக்கியிருக்கும் படத்திற்கு தரைப்படை என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் மிரட்டலான வகையில் பிரஜின் இருந்தார். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பல உள்ளது. இந்த படத்தில் பிரஜினுடன் இணைந்து விஜய் விஷவா, விஜய் டிவி ஜீவா, மோகனா சித்தி, ஷாலினி, சாய் தன்யா என பலர் நடித்துள்ளனர். விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Share this story