தருணம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள தருணம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
’தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவான தருணம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. படத்தை பற்றிய நல்ல விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டனர்.
இப்படத்தில் கிஷன் தாஸ்க்கு ஜோடியாக ஸ்ம்ருதி நடித்துள்ளார். இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.
Bringing #Tharunam back to the big screens after we decided to discontinue the run during Pongal ❤️
— Kishen Das (@kishendas) January 28, 2025
Jan 31st is the date and we hope to see more of you in theatres with more shows and favourable timings ❤️
To the ones who have seen the film, do spread your reviews ❤️ pic.twitter.com/PCsFHhhMQs
பொங்கல் அன்று வெளியான திரைப்படம் சில காரணங்களுக்காக திரையிடல் நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே இத்திரைப்படம் வெளியானதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்து இருந்த நிலையில் தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. தருணம் திரைப்படம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். தருணம் திரைப்படம் ஒரு திரில்லர் கதைக்களத்தை கொண்ட திரைப்படமாகும்.