அந்த மனசு தான் சார் கடவுள்..! நடிகரின் ஆபரேஷனுக்கான ரூ. 50 லட்சம் செலவை ஏற்ற பிரபாஸ்..!

1

தெலுங்கு படங்களில் நடித்து வரும் Fish வெங்கட்டிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரூ. 50 லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வெங்கட்டின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து அறிந்த பிரபாஸோ அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவையும் தானே ஏற்பதாக வெங்கட்டின் குடும்பத்தாரை அணுகி உறுதி அளித்திருக்கிறார்.


அறுவை சிகிச்சைக்கு தேதி குறித்ததும் சொல்லுங்கள் ரூ. 50 லட்சம் பணத்தை தான் மருத்துவமனையில் கட்டுகிறேன் என கூறியிருக்கிறார் பிரபாஸ். தற்போது பணம் தயாராக இருக்கிறது. ஆனால் சிறுநீரகம் தான் கிடைக்கவில்லை.

வெங்கட்டின் குடும்பத்தாரின் சிறுநீரகம் அவருக்கு பொருந்தவில்லை. அதனால் யாராவது சிறுநீரக தானம் கொடுத்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகினர் தன் தந்தைக்கு சிறுநீரகம் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார் வெங்கட்டின் மகள் ஸ்ராவந்தி. சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் அல்லது ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தன் தந்தைக்கு சிறுநீரகம் கிடைக்க உதவு செய்வார்கள் என நம்புவதாக கூறியிருக்கிறார் ஸ்ராவந்தி.


தன் அப்பா பல காலமாக படங்களில் நடித்து வந்தாலும் திரையுலகில் இருந்து உதவி கிடைப்பது எளிதாக இல்லை என வருத்தப்படுகிறார் வெங்கட்டின் மகள். என் அப்பாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. தயவு செய்து அவருக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ராவந்தி.


தெலுங்கு திரையுலகின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் வெங்கட் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்த வெங்கட் தற்போது உயிருக்கு போராடி வருவது தெலுங்கு சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.

Share this story