அந்த மனசு தான் சார் கடவுள்.... கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திய விஷால்..

அந்த மனசு தான் சார் கடவுள்.... கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திய  விஷால்..

தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்திற்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார். 

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது 34-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷாலை சந்தித்து குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுவதாகவும், குடிநீர் வசதி செய்து தரும்படியும் கோரிக்கை வைத்தனர்.

அந்த மனசு தான் சார் கடவுள்.... கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திய  விஷால்..

அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த நடிகர் விஷால், குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை சந்தித்து கலந்து ஆலோசித்து தனது தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளார். மேலும் 2 சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதிக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். 
 

Share this story