சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.. ஆர்வத்தில் ரசிகர்கள்...!

sun pictures

 சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பால், ரசிகர்கள் ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். 
 
புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லீயுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.  அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்க உள்ள இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. அட்லீ- அல்லு அர்ஜுன் இணைய உள்ள 
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீயை சந்தித்து இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவ்கள் வெளியானது. 


  இந்த நிலையில் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் “மாஸும் மாயாஜாலமும் சந்திக்கும் ஒரு மிகச்சிறந்த படைப்பு, காத்திருங்கள்" என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தை குறித்த அறிவிப்பைதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடப்போகிறது. அதற்கான முன்னறிவிப்பு போஸ்டர்தான் இது என இணையத்தில் சினிமா ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

Share this story