நாளை நடைபெறும் 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா...!

கமல்ஹாசன் சிம்பு நடித்துள்ள 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
Power meets the Pulse #ThuglifeAudioLaunch tomorrow from 5 PM
— Raaj Kamal Films International (@RKFI) May 23, 2025
#Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact… pic.twitter.com/f52YjgFWNm
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை மிக பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெறுகிறது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.