அதிரடி தீர்ப்பு: ‘தி கேரளா ஸ்டோரி” படத்தின் மீதான தடை நீக்கம்.

photo

 கடந்த மே 5ஆம் தேதி வெளியாகி சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் “ தி கேரளா ஸ்டோரி”. பத்தின் டீசர் வெளியானது முதலே பல எதிர்ப்புகளை சந்தித்து வந்த இந்த படத்தை வெளியிட மேற்கு வங்கம் தடை விதித்தது.  இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் தற்போது   உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

photo

தமிழ்நாட்டில் படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் மறுத்தது தொடர்பாகவும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மேற்கு வங்கத்தில் இப்படத்தை வெளியிட தடை விதித்திருந்த நிலையில் அதற்கு எதிராகவும் தயாரிப்பாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தக்க பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில்அதற்கு மக்கள் மத்தியில் வரவற்பு இல்லாததால் படத்தை தூக்கியதாகவும் பதிலும் அளிக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

photo

அதாவது மேற்கு வங்கத்தில் படத்தை வெளியிட அரசு சார்பாக பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் ஆனை பிறப்பித்துள்ளது.

Share this story