என் கரியரிலே மிகப்பெரிய படம்... மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து சுந்தர் சி பேச்சு...!

என் கரியரிலே நான் இயக்கப் போகிற மிகப்பெரிய படம் ’மூக்குத்தி அம்மன் 2’ தான் என இயக்குனர்
சுந்தர்.சி கூறியுள்ளார்.
‘அரண்மனை 4’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது சுந்தர்.சி நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கிய படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
With divine blessings, the magic begins! 🔱✨ The cameras are rolling for #MookuthiAmman2! 🎬🔥
— Vels Film International (@VelsFilmIntl) March 6, 2025
Live now! https://t.co/uMJfTj9h57
Get ready for an extraordinary ride! #FilmingStarts #Velsfilminternational@VelsFilmIntl#Nayanthara pic.twitter.com/M5uOBxQNFN
தற்போது வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ், ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை தயாரிக்கின்றன. இந்த படப்பிடிப்பு கோயில் செட் போடப்பட்டு சென்னை பிரசாத் லேபில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#Nayanthara who usually don't attend Film Pooja has now came in for #MookuthiAmman2 launch !!
— AmuthaBharathi (@CinemaWithAB) March 6, 2025
Here is the First shot of the film 🎬 pic.twitter.com/gNrzaFuNKN
இந்த நிலையில் பூஜையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டுள்ளார். மேலும் குஷ்பு, நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். விழா மேடையில் பேசிய சுந்தர்.சி, “இந்தப் படம் ஐசரி சாருடைய விஷன். ஒரு டைரக்டரா எங்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும். அதை நிறைவேற்ற மிகப் பெரிய சக்தி தேவைப்படும். அந்த சக்திதான் வேல்ஸ் நிறுவனம். இந்தப் படத்தை சிறியதாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால் கதை போகப்போகப் பெரிய படமாக மாறிவிட்டது. என் கரியரிலே நான் இயக்கப் போகிற மிகப்பெரிய படம் இந்தப் படம்தான். மேலும் இந்தியாவின் மிகப் பெரிய படங்களில் ஒன்றாக இந்த படம் அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.