நான் செய்த பெரிய தவறு நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைத்தது தான்...தனுஷ் பட இயக்குனர் புலம்பல்..!

1

தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ’அனாமிகா’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றும் கூறப்பட்டது.


ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த ’கஹானி’ என்ற படத்தின் ரீமேக் தான் ’அனாமிகா’ என்பதும் ஹிந்தியில் ’கஹானி’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ’அனாமிகா’ படம் தோல்வி அடைந்தது. இதனால் இயக்குனர் சேகர்  கம்முலாக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அதன் பின்னர் தான் நயன்தாராவுக்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது, அவரை வேற மாதிரி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு சீரியஸ் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனால் நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்றும் சமீபத்தில் அளித்த கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story