‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநரின் அடுத்த படம்…..
1703431778292
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலமான இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகவுள்ள அடுத்த படம் குறித்த டீசர் வெளியாகியுள்ளது.
ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து, பொய்கால் குதிரை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். இவர் ஒரு நடிகரும் கூட, இந்த நிலையில் இவர் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தை நோவா ஃபிலிம் ஸ்டுடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இனைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் பேச்சுலர்களின் வாழ்கை குறித்த படமாக இருக்கும் என தெரிகிறது.