அதிக தொகைக்கு விற்கப்பட்ட ‘கங்குவா’ டிஜிட்டல் உரிமை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சூர்யாவின் படம் !

kanguva

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். 

kanguva

யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது.  ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படம் கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாகி வருகிறது. 

kanguva

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமையை 80 கோடிக்கு அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் டீசரை வரும் ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 




 

Share this story