`மாமன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்...

சூரி நடித்துள்ள `மாமன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனமான ஜீ5 கைப்பற்றியுள்ளது.
கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
It’s official! @ZeeTamil secures the satellite rights and @ZEE5Tamil the digital rights for #Maaman 📺💻
— Actor Soori (@sooriofficial) May 8, 2025
#MaamanFromMay16
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1@AishuL #Swasika #RajKiran #JayaPrakash @Bala_actor #BabaBaskar… pic.twitter.com/U85iwMKqzV
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர். ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி உள்ள 'மாமன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு U சான்று வழங்கியுள்ளது. இந்நிலையில், `மாமன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.