ஹீரோவாகிறார் Tourist Family இயக்குனர்!
1751695897345

'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஹீரோவாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார் நடித்து சமீபத்தில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ரூ. 50 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்தது. சினிமா துறையை சார்ந்த ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தை பாராட்டினர்.
இந்நிலையில் 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அணஸ்வரா ராஜன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'டூரிஸ்ட் பேமிலி' இணை இயக்குநரால் இப்படம் இயக்கப்பட உள்ளது.