இந்தியன் 2 படத்தின் டப்பிங் விறுவிறுப்பு... வீடியோவை வெளியிட்டது லைகா...

இந்தியன் 2 படத்தின் டப்பிங் விறுவிறுப்பு... வீடியோவை வெளியிட்டது லைகா...

இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

இந்தியன் 2 படத்தின் டப்பிங் விறுவிறுப்பு... வீடியோவை வெளியிட்டது லைகா...

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

சில பிரச்சனைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது படத்திற்கான டப்பிங் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியன் 2 படத்திற்கு கமல் ஹாசன் டப்பிங் கொடுக்கும் காணொலியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதனை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Share this story