வாழை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்... புகைப்படங்கள் வெளியீடு...

வாழை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்... புகைப்படங்கள் வெளியீடு...

உதயநிதியின் 'மாமன்னன்' படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாழை'. 1994-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. நான்கு சிறுவர்களை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனமும், மாரி செல்வராஜின் நேவி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.  இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பை கடந்த நவம்பர் மாதம் நடிகர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த படப்பிடிப்பு முழுக்க முழுக்க கொங்கராயகுறிச்சி பகுதியிலேயே நடைபெற்று முடிந்தது.

வாழை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்... புகைப்படங்கள் வெளியீடு...

இந்நிலையில், வாழை படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 
 

Share this story