ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'குட் பேட் அக்லி' டீசர் வெளியானது...!

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.
‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
அண்மையில் இந்தப் படத்தில் நடிக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர வீடியோ வெளியானது. அதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதோடு புதிய ப்ரோமோவையும் படக்குழு வெளியிட்டது.
Maamey!
— Mythri Movie Makers (@MythriOfficial) February 28, 2025
The festival is here 💥
This summer is going to be SUPER CRAZY 🔥🔥
Here's the #GoodBadUglyTeaser ❤️🔥
▶️ https://t.co/evp1QJiM2J#GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment 🤩
A @gvprakash Musical ❤️🔥
#AjithKumar… pic.twitter.com/M4hRGPdbAr
இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.