துரத்தி கொண்டே வந்த ரசிகர்.. வார்னிங் செய்த பிரியங்கா மோகன்...

priyanka mohan

நடிகை பிரியங்கா மோகன் தன்னை துரத்திக் கொண்டே வந்த ரசிகரை எச்சரிக்கை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக சினிமா ஸ்டார்களை பார்த்தால் உடனே செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கு ஏற்படுவது உண்டு. அந்த வகையில் பிரியங்கா மோகன் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக சில நாட்களாக பின் தொடர்ந்து உள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பிரியங்கா மோகன் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரை பின் தொடர்ந்து சென்று செல்பி எடுக்க அந்த இளைஞர் அனுமதி கேட்டார். இதனைத் தொடர்ந்து கோபமான பிரியங்கா மோகன், "இப்படி என் பின்னாலேயே துரத்திக் கொண்டு வரக்கூடாது," என்று ஆத்திரமாக அறிவுரை கூறியதோடு, அதன் பின் அவர் சிரித்த முகத்துடன் அந்த இளைஞருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.priyanka mohan

மேலும், இது குறித்து தனது அருகில் உட்கார்ந்திருந்த சரண்யா பொன்வண்ணன் இடம் பிரியங்கா மோகன் கூறும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன. சினிமா நடிகர், நடிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று என்றாலும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் சிலர், "நடிகர், நடிகைகளை துரத்தி செல்பி எடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?" என்று கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story