“ஆக்‌ஷன் ஹீரோவாக என்னை உருவாக்கிய படம்” - விஷால் நெகிழ்ச்சி

“ஆக்‌ஷன் ஹீரோவாக என்னை உருவாக்கிய படம்” - விஷால் நெகிழ்ச்சி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. விக்ரம் கிருஷ்ணா தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களைத் தாண்டி படத்தின் பிண்ணனி இசை இன்றளவும் பேசப்படுகிறது. மேலும் விஷால் கரியரில் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் கடக்கிறது. 


இதையொட்டி நடிகர் விஷால் அவரது டிவிட்டர் பக்கத்தில், “18 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2005 அன்று வெள்ளித்திரையில் சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். 
 

Share this story