10 நாட்களில் படம் ரிலீஸ்.. இந்த நேரத்தில் ‘குபேரா’ படக்குழு வெளியிட்ட திடீர் அப்டேட்..

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குபேரா’. இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாகார்ஜுனாவும் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ‘குபேரா’ ஜூன் 20ம் தேதி வெளியாகிறது.
அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ஒவ்வொரு போஸ்டர்களும் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. அத்துடன் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழாவும் அந்த எதிர்பார்ப்புக்கு வலு சேர்த்துள்ளது. மேலும் இந்தப்படத்திற்கு தனிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷின் 51வது படமான குபேரா வெளியாக இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் உருவப்படம் கொண்ட அந்த போஸ்டரில் ஒரு பாதி, கோட் சூட்கள் அணிந்த வசதியான தோற்றமும், மறுபாதி அழுக்கு சட்டை, பரட்டை தலை, தாடியுடன் இருப்பது போன்றும் உள்ளது. ஒவ்வொரு போஸ்டரிலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்து வரும் ‘குபேரா’ படக்குழு, இந்த போஸ்டரிலும் அதை டபுள் ஆக்கியுள்ளனர்.
#kubera pic.twitter.com/SUg7iSHOcp
— Dhanush (@dhanushkraja) June 10, 2025
#kubera pic.twitter.com/SUg7iSHOcp
— Dhanush (@dhanushkraja) June 10, 2025