சீனுராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்

சீனுராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம் 

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சீனுராமசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் தற்போது கோழிப்பண்ணை செல்லதுரை என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் தொடங்கியது. 

சீனுராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம் 

இந்நிலையில், தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 

Share this story