புத்தாண்டு தினத்திற்கு வெளியாகும் விடாமுயற்சி முதல் தோற்றம்

புத்தாண்டு தினத்திற்கு வெளியாகும் விடாமுயற்சி முதல் தோற்றம்

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றிருந்தனர். இதனிடையே படக்குழு 5 நாட்கள் இடைவெளியில், சென்னை திரும்பியது.

புத்தாண்டு தினத்திற்கு வெளியாகும் விடாமுயற்சி முதல் தோற்றம்

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் புத்தாண்டு அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதே நாளில் தளபதி68 படத்தின் முதல் தோற்றமும் வெளியாவதாக தெரிகிறது.
 

Share this story