கிப்ட் படத்தின் முதல் தோற்றம் வெளியானது

கிப்ட் படத்தின் முதல் தோற்றம் வெளியானது

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் கிப்ட் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. 

பிரேமம், நேரம் ,கோல்ட் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இவர், அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். கிப்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். அல்போன்ஸ் புத்திரன், இளையராஜா, சாண்டி என ஒரு வித்தியாசமான காம்போவில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து கோவை சரளா, சஹானா சர்வேஷ், ராகுல், சார்லி, ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

இந்நிலையில், படத்தின் முதல் தோற்றத்தை காணொலியுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story