ஹலிதா ஷமீனின் மின்மினி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

ஹலிதா ஷமீனின் மின்மினி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

ஹலிதா ஷமீனின் பிறந்தநாளை ஒட்டி, அவர் இயக்கியுள்ள மின்மினி படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பூவரசம் பீப்பீ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். பின்னர் அவரது இயக்கதில் அடுத்து வௌியான சில்லு கருப்பட்டி திரைப்படம், ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஏலே. அத்திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கென தனி பாணியில் தொடர்ந்து மனித உணர்வுகளோடு உரையாடும் அழகான படைப்புகளை கொடுத்து வருபவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். தற்போது, அவர் மின்மினி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி படத்தின் முதல் தோற்றம் வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் கதீஜா ரஹ்மான் இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story