கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அறிவித்தபடி வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சீரியலான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்து, பின் பிக் பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் கவின். தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பிளடி பெக்கர்’. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில் இவர், அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு 'மாஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Proud to be associated with #Vetrimaran sir,@gvprakash bro, @andrea_jeremiah , @PeterHeinOffl master, @RDRajasekar sir.
— Kavin (@Kavin_m_0431) February 26, 2025
Alongside the talented team of #MASK@Raasukutty16 @GrassRootFilmCo @BlackMadra38572 @iRuhaniSharma #RamarEditor @jacki_art @RIAZtheboss @PoorthiPravin… pic.twitter.com/EMMUi0zmyL
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கவின், ஆண்ட்ரியா இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.