ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராம் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். ஏனென்றால் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இவர் இயக்கியிருந்த கற்றது தமிழ், தங்கமீன்கள் பேரன்பு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இவர், மிர்ச்சி சிவா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு பறந்து போ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவா உடன் இணைந்து கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது பிடிவாதமாக இருக்கும் மகனுக்கும் மிடில் கிளாஸ் குடும்ப தலைவனாக பணக்கஷ்டத்தில் இருக்கும் தந்தைக்கும் இடையிலான பயணத்தையும் அவர்கள் சந்திக்கும் மனிதர்களின் மூலம் அவர்களது வாழ்க்கையை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்திற்கு பின்னர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.