பூவையார் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்...!

povaiyar

சூப்பர் சிங்கர் பூவையார் நாயகனாக நடிக்கும் ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகியுள்ளது.

அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜெயவேல் இயக்கியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். கானா பாடல்கள் அவரது அடையாளமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் பாடலில் நடனமாடி அறிமுகமானார். மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கூடுதல் பிரபலமானார்.

povaiyar
மாஸ்டர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதற்குப் பிறகு மகாராஜா, அந்தகன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது, நாயகனாக முன்னேறியுள்ளார். ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குக் வித் கோமாளி சீசன் 6-இல் கோமாளியாகவும் பங்கேற்று வருவது கவனிக்கத்தக்கது.

Share this story