சாண்டி நடித்துள்ள ரோசி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

சாண்டி நடித்துள்ள ரோசி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

தமிழ் சினிமாவில் பிரபல நடன  இயக்குனராக இருப்பவர் சாண்டி. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.  அதன்பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கொரியோகிராஃப் செய்து வருகிறார். தற்போது 3 : 33 என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி நடித்திருந்தார். படம் வெளியான பிறகு சாண்டிக்கு இத்திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. பலரும் சாண்டியின் நடிப்பை கண்டு மிரண்டு போயினர். 

சாண்டி நடித்துள்ள ரோசி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

இந்நிலையில், அவர் கன்னட மொழியிலும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ், சாண்டியின் இந்த திரைப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரோசி எனும் தலைப்பிடப்பட்ட இப்படத்தில் சாண்டி நடித்து வருகிறார். ஷூன்யா  இந்த படத்தை இயக்குகிறார். 

Share this story